சுடச்சுட

  

  கிரேட்டர் நொய்டாவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில், இளைஞர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததும், அவரது மனைவி மணிக்கட்டு வெட்டப்பட்ட நிலையில் மயங்கிய நிலையில் இருந்ததும் செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர்.
  இது குறித்து காவல் துறை உயரதிகாரி புதன்கிழமை கூறியதாவது: ஹிமாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சன்னி சின்ஹா (30). அவரது மனைவி பிரியங்கா (28), பிகாரைச் சேர்ந்தவர். இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.  இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், பிரியங்கா தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது.
  இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் சன்னி சின்ஹாவின் சக ஊழியர் ஒருவர் போலீஸுக்கு தொடர்பு கொண்டார். இதைத் தொடர்ந்து, போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது, அந்த வீட்டில் பிரியங்கா ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அறையில் மின்விசிறியில் சன்னி சின்ஹா தூக்கிட்டுத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. பிரியங்கா உயிருடன் இருப்பது தெரிந்ததும், அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
  மருத்துவர்களின் பரிந்துரையைத் தொடர்ந்து, அவர் பின்னர் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, தூக்கில் தொங்கிய சன்னி சின்ஹாவின் சடலம் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. 
  பிரியங்காவுக்கு சுய நினைவு வந்த பிறகுதான் வாக்குமூலம் பெறப்படும். அப்போதுதான் உண்மை நிலை தெரிய வரும். இதுவரை இச்சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் பெறப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai