Enable Javscript for better performance
மேற்கூரை இடிந்து 2 பெண்கள் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கிழக்கு தில்லி, ஷாதரா பகுதியில் காய்கறிகள் வாங்கிக் கொண்டிருந்த பெண்கள் இருவர், கட்டடத்தின் மேற்கூரைப் பகுதி இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.
    இது குறித்து போலீஸார் கூறியதாவது: தில்லி ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுமித்ரா (64), சாவித்திரி (55). இருவரும் ஷாதரா பகுதியில் மானசரோவர் பார்க்கில் ஒரு கடையில் வியாழக்கிழமை காய்கறிகள் வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தக் கட்டடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சாவித்திரி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சுமித்ரா, செயிண்ட் ஸ்டீபன் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சையின் போது உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai