டியு மாணவர் சங்கத் தேர்தல்: உத்தேச வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஏபிவிபி

தில்லி பல்கலைக்கழக (டியு) மாணவர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடும் உத்தேச வேட்பாளர் பட்டியலை

தில்லி பல்கலைக்கழக (டியு) மாணவர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடும் உத்தேச வேட்பாளர் பட்டியலை ஆர்எஸ்எஸ் சார்பு மாணவர் அமைப்பான ஏபிவிபி வெளியிட்டுள்ளது. அதில் 10 பேர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத் தேர்தல் செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இத்தேர்தலில் போட்டியிடும் உத்தேச வேட்பளர்களின் பட்டியலை ஏபிவிபி அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், துஷர் தேதா, யோகித் ரதி, சஹில் மாலிக், அக்ஷித் தஹியா, ஸ்கஹின், வருண் ரெக்ஸ்வால், பிரதீப் தன்வார், சிவாங்கி கராஃப், ஜெய்தீப் மான் மற்றும் மான்சி செளகான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 4 பேர் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவர்.
இது குறித்து ஏபிவிபியின் தில்லி மாநிலச் செயலாளர் சித்தார்த் யாதவ் கூறுகையில், "அறிவிக்கப்பட்டுள்ள உத்தேச வேட்பாளர்கள் 10 பேரும் தில்லி பல்கலைக்கழக ஆளுமைக்குள்பட்ட அனைத்துக் கல்லூரிகளுக்கும் சென்று ஏபிவிபி தலைமையிலான தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தின் சாதனைகள் குறித்து விளக்கி எடுத்துரைப்பர். அப்போது, மாணவர்களிடம் இருந்து கருத்துகளையும் பெறுவர். இதன் அடிப்படையில், ஏபிவிபி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். இவர்களில் 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவர்' என்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத் தேர்தலில் ஏபிவிபி மூன்று இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் சார்பு மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர்கள் சங்கம் (என்எஸ்யுஐ) ஓர் இடத்தில் வெற்றி பெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com