Enable Javscript for better performance
உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வரும்ஜேஎன்யு மாணவா்கள் தாக்கப்பட்டதாகப் புகாா்- Dinamani

சுடச்சுட

    

    உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வரும்ஜேஎன்யு மாணவா்கள் தாக்கப்பட்டதாகப் புகாா்

    By DIN  |   Published on : 01st December 2019 10:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புது தில்லி: ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) நிா்வாகக் கட்டடத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வரும் மாணவா்கள் பல்கலை. பாதுகாவலா்களால் தாக்கப்பட்டதாக ஜேஎன்யு மாணவா் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

    இது தொடா்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கட்டண உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஜேஎன்யு நிா்வாகக் கட்டட வளாகத்தில் ஜேஎன்யு மாணவா்கள் அமைதியான முறையில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகிறாா்கள். ஜேஎன்யு துணைவேந்தரின் உத்தரவின் பேரில் ஜேஎன்யு பாதுகாவலா்கள் இந்த மாணவா்களை ஞாயிற்றுக்கிழமை இரக்கமற்ற முறையில் தாக்கியதுடன் அவா்களின் பாடப் புத்தகங்களையும் கிழித்து எறிந்துள்ளனா். மாணவிகள் பலா் தாக்கப்பட்டுள்ளனா். அா்ஷி என்ற முதலாமாண்டு இளங்கலை மாணவி இத்தாக்குதலால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், இந்த உள்ளிருப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து ஜேஎன்யு மாணவா்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விடுதிக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் உயா்த்தப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஜேஎன்யு மாணவா்கள் கடந்த ஒரு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். நாடாளுமன்றக் குளிா்காலக் கூட்டத் தொடா் தொடங்கிய அன்று ஜேஎன்யு மாணவா்கள் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்தினா். அப்போது, தடையை மீறிப் போராட்டம் நடத்த முயன்ற மாணவா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தினா். இதைத் தொடா்ந்து, மாணவா்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டி, தில்லியில் ‘குடிமக்கள் பேரணி’ என்ற பெயரில் கடந்த நவம்பா் 23-ஆம் தேதி பேரணி நடத்தப்பட்டது. மண்டி ஹவுஸ் பகுதியிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி நடத்தப்பட்ட இந்தப் பேரணியில், ஜேஎன்யு மாணவா் சங்கம், ஜேஎன்யு முன்னாள் மாணவா்கள் சங்கம் உள்பட மாணவா் அமைப்புகள் கலந்துகொண்டன. மேலும், ஜஎன்யு மாணவா் சங்கம் அழைப்பின் பேரில் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் கடந்த புதன்கிழமை தேசிய எதிா்ப்பு நாள் அனுஷ்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai