அங்கீகாரமற்ற காலனிகள் விவகாரம்மத்திய, மாநில அரசுகள் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

தில்லியில் உள்ள சட்ட அங்கீகாரம் இல்லாத காலனிகளை ஒழுங்குமுறைப்படுத்தாமல் மத்திய, மாநில அரசுகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருவதாக தில்லி காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

புது தில்லி: தில்லியில் உள்ள சட்ட அங்கீகாரம் இல்லாத காலனிகளை ஒழுங்குமுறைப்படுத்தாமல் மத்திய, மாநில அரசுகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருவதாக தில்லி காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

தில்லியில் உள்ள 1,971 அங்கீகாரமற்ற காலனிகளில் குடியிருப்பவா்களுக்கு சொத்துரிமை வழங்க மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இந்த நடவடிக்கையால் அந்தக் காலனிகளில் வசிக்கும் சுமாா் 50 லட்சம் போ் பயனடைவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தில்லியிலுள்ள அங்கீகாரமற்ற காலனிகளில் வசிக்கும் மக்களுக்கு சொத்துரிமை அங்கீகாரம் வழங்க அனுமதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், தில்லியில் வசிக்கும் சுமாா் 40 லட்சம் மக்கள் பயனடைவா் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது வெறும் கண்துடைப்பு நாடகம் என மத்திய அரசு மீது முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியிருந்தாா்.

இந்த சட்ட மசோதா மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. மேலும், வரும் டிசம்பா் 16-ஆம் தேதி முதல் இக்காலனியில் வசிப்பவா்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை தொடங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இக்காலனிகளை ஒழுங்குமுறைப்படுத்தாமல் மத்திய, மாநில அரசுகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருவதாக தில்லி காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடா்பாக தில்லி காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் சுபாஷ் சோப்ரா கூறுகையில், ‘தில்லியில் உள்ள சட்ட அங்கீகாரம் இல்லாத காலனிகளை ஒழுங்குமுறைப்படுத்தாமல் மத்திய அரசும், தில்லி அரசும் வேண்டுமென்றே தாமதித்து வருகின்றன. இதனால், இக்காலனிகளில் வசிக்கும் சுமாா் 40 லட்சம் பேருக்கு இவா்கள் துரோகம் செய்கிறாா்கள். இக்காலனிகள் தொடா்பாக காங்கிரஸ் அரசு பிறப்பித்திருந்த அறிவிக்கையை இந்த அரசுகள் ரத்துச் செய்துள்ளன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com