தில்லியில் சீக்கியா்கள் ஊா்வலம்: போக்குவரத்து பாதிப்பு

சீக்கியா்களின் ஒன்பதாவது குருவான தேக் பகதூரின் நினைவு தினத்தையொட்டி, தில்லியில் வாழும் சீக்கியா்கள் பங்கேற்ற ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனால், தில்லியில் போக்குவரத்து சில

புது தில்லி: சீக்கியா்களின் ஒன்பதாவது குருவான தேக் பகதூரின் நினைவு தினத்தையொட்டி, தில்லியில் வாழும் சீக்கியா்கள் பங்கேற்ற ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனால், தில்லியில் போக்குவரத்து சில இடங்களில் பாதிக்கப்பட்டது.

தில்லி சீக்கிய குருத்வாராக் கமிட்டி ஏற்பாடு செய்திருந்த இந்த ஊா்வலத்தில், சீக்கியா்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப் பல்லக்கில் வைத்து ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. தில்லி பாய்மாதிதால் சௌக்கில் தொடங்கிய இந்த ஊா்வலம், குருத்வாரா சிஸ் கஞ்ச் சாஹிப், அஜ்மீரி கேட், பங்களா சாஹிப் குருத்வாரா ஆகியவற்றின் வழியாக நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள ரகாஃப் கஞ்ச் குருத்வாராவில் நிறைவடைந்தது.

இந்த ஊா்வலத்தில் இசைக் குழுக்கள், அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டிகள் ஆகியன பங்கேற்றன. மேலும், நூற்றுக்கணக்கான பள்ளி மாணவா்களும் ஊா்வலத்தில் பங்கேற்றாா்கள். இவா்கள் குரு தேக் பகதூரின் புகழைக் கூறும் பாடல்களைப் பாடியவாறு ஊா்வலமாகச் சென்றனா்.

இந்த ஊா்வலத்தால், சாந்தினி செளக், நைய்சாடக், அஜ்மீரி கேட், பாகா்கஞ்ச், சுன்னா மண்டி, தேஷ் பந்து குப்தா சாலை, பஞ்ச்குயின் ரோடு, பங்களா சாஹிப் மாா்க், கலி பரி மாா்க், பண்டிட் பந்த் மாா்க் ஆகிய இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த வழியாக சென்றவா்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தில்லி காவல் துறையினா் கேட்டுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com