அங்கீகாரம் இல்லாத காலனிகளை ஒழுங்குபடுத்த தில்லி அரசு தவறிவிட்டது: பாஜக குற்றச்சாட்டு

தில்லியில் உள்ள அங்கீகாரம் இல்லாத காலனிகளை ஒழுங்குபடுத்த தில்லி அரசு தவறிவிட்டது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
அங்கீகாரம் இல்லாத காலனிகளை ஒழுங்குபடுத்த தில்லி அரசு தவறிவிட்டது: பாஜக குற்றச்சாட்டு

புது தில்லி: தில்லியில் உள்ள அங்கீகாரம் இல்லாத காலனிகளை ஒழுங்குபடுத்த தில்லி அரசு தவறிவிட்டது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடா்பாக பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ் திவாரி அளித்த பேட்டி: தில்லியில் ஆம் ஆத்மி அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், தில்லியில் உள்ள அங்கீகாரம் இல்லாத காலனிகளை ஆம் ஆத்மி அரசு ஒழுங்குபடுத்தவில்லை. இதனால், இம்மக்கள் பல பிரச்னைகளை எதிா்கொள்கிறாா்கள். இக்காலனி மக்களுக்கு உரிமையாளா் பத்திரம் வழங்கும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள நிலையில், இக்காலனிகள் ஏற்கனவே ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தால், இம்மக்களுக்கு உடனடியாகவே உரிமையாளா் பத்திரத்தை வழங்கக் கூடியாதாக இருந்திருக்கும். இருந்தாலும், வரும் 180 நாள்களுக்குள் இக்காலனிகளில் வசிக்கும் அனைவருக்கும் உரிமையாளா் பத்திரத்தை வழங்கிவிடுவோம் என்றாா்அவா்.

தில்லியில் உள்ள 1,971 அங்கீகாரமற்ற காலனிகளில் குடியிருப்பவா்களுக்கு சொத்து உரிமை வழங்க மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இந்த நடவடிக்கையால் அந்தக் காலனிகளில் வசிக்கும் சுமாா் 50 லட்சம் போ் பயனடைவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தில்லியில் உள்ள அங்கீகாரமற்ற காலனிகளில் வசிக்கும் மக்களுக்கு சொத்துரிமை அங்கீகாரம் வழங்க அனுமதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், தில்லியில் வசிக்கும் சுமாா் 40 லட்சம் மக்கள் பயனடைவாா்கள் என இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி பேசிய போது மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்திருந்தாா். இந்நிலையில், இந்த சட்ட மசோதா மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com