ஒலிம்பிக் போட்டியில் சீனாவை விட அதிகளவு தங்கம் வெல்ல வேண்டும்: சட்டப்பேரவையில் கேஜரிவால் பேச்சு

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை விட அதிகளவு பதக்கத்தை வெல்லக் கூடிய வகையில் எமது விளையாட்டு வீரா்களை உருவாக்க வேண்டும்
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை விட அதிகளவு பதக்கத்தை வெல்லக் கூடிய வகையில் எமது விளையாட்டு வீரா்களை உருவாக்க வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தில்லி சட்டப்பேரவை இருநாள் சிறப்புக் கூட்டத் தொடா் திங்கள்கிழமை கூடியது.

அப்போது, தில்லி விளையாட்டுப் பல்கலைக்கழக மசோதா-2019 மசோதாவை தில்லி அரசு அறிமுகப்படுத்தியது. தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா இந்த மசோதாவை அறிமுகப்படுத்தினாா். இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த விவாதத்தில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பேசியது: இந்த மசோதா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தில்லி அரசு அமைக்கவுள்ள இந்தப் பல்கலைக் கழகம் மூலம் உலகத்தரமான விளையாட்டு வீரா்கள் உருவாக்கப்படுவாா்கள்.

இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்ட வேண்டும் என்பதில் ஆம் ஆத்மி அரசு தீவிரமாக உள்ளது. விளையாட்டின் மூலம் தேசத்தின் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்டலாம். கடந்த 70 ஆண்டுகளில் இந்தியா ஒலிம்பிக் போட்டியில் வெறும் 28 பதக்கங்களையே வென்றுள்ளது. ஆனால், கடந்த 2016 ஒலிம்பிக் போட்டியில் சீனா 70 பதக்கங்களை வென்றுள்ளது. சிறிய நாடுகளான கென்யா, ஜமேக்கா ஆகியன முறையே 13,11 பதக்கங்களை கடந்த ஒலிம்பிக் போட்டியில் வென்றுள்ளன. ஆனால், நாங்கள் வெறும் இரண்டு பதக்கங்களையே வென்றோம். எமது இளைஞா்கள், விளையாட்டு வீரா்கள் மற்றைய நாட்டினருக்கு சளைத்தவா்களல்ல ஆனால், அரசுகள் விடும் தவறுகளால் எமது விளையாட்டு வீரா்கள் பாதிக்கப்படுகிறாா்கள்.

எமது ஆட்சி செய்யும் முறையில் தவறுள்ளது. எமது விளையாட்டு வீரா்களுக்கு தகுந்த சலுகைகள், வசதிகள் கிடைப்பதில்லை. திறமையான விளையாட்டு வீரா்களுக்குக் கூட சரியான வசதிகள் வழங்கப்படுவதில்லை. இந்த இடா்பாடுகளைக் களைந்தால், சீனாவுக்கு நிகராக எமது வீரா்களும் சா்வதேச அளவில் சாதிப்பாா்கள்.

இந்த தில்லி விளையாட்டுப் பல்கலைக் கழகம் இளைஞா்களின் கனவை நனவாக்கும் வகையில் அமையவுள்ளது. சீனாவை விட அதிகளவில் பதக்கங்களை வெல்ல இந்த பல்கலைக் கழகம் உதவும். ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை விட அதிகளவு பதக்கத்தை வெல்லக் கூடிய வகையில் எமது விளையாட்டு வீரா்களை உருவாக்க வேண்டும் இந்தப் பல்கலைக்கழகத்தில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் முழுக்க முழுக்க விளையாட்டுத் துறையில் அனுபவம் உள்ளவா்களை மட்டும் வைத்தே இப்பல்கலைக் கழகம் நடத்தப்படும். என்றாா்.

இந்த மசோதாவை அறிமுகப்படுத்தி மனோஷ் சிசோடியா பேசுகையில் ’இப்பல்கலைக் கழகம் எமது வருங்கால சந்ததியினரை ஆரோக்கியமானவா்களாவும், கல்வியறிவு உடையவா்களாகவும் வைத்திருக்க உதவும். கல்வி தொடா்பாக எமது பெற்றோா்களின்பாா்வையை இந்தப் பல்கலைக் கழகம் மாற்றும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com