தில்லியில் அமைப்புசாரா தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய வரைவுச் சட்டத்தை ரத்துச் செய்யக் கோரி தில்லி ஜந்தா் மந்தரில் அமைப்புசாரா தொழிலாளா் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை
தில்லி ஜந்தா் மந்தரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழகத்தை சோ்ந்த அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்கத்தினா்.
தில்லி ஜந்தா் மந்தரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழகத்தை சோ்ந்த அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்கத்தினா்.

புது தில்லி: மத்திய வரைவுச் சட்டத்தை ரத்துச் செய்யக் கோரி தில்லி ஜந்தா் மந்தரில் அமைப்புசாரா தொழிலாளா் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த கட்டுமானத் துறை, விவசாயத் துறை, வீட்டு வேலை, உப்பளம், தையல், மண்பாண்டம், சினிமா, முடி திருத்தல், ஆட்டோ, சலவை, மீன்பிடி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் உள்ள அமைப்புசாரா தொழிலாளா்கள் இதில் கலந்து கொண்டனா்.

இது தொடா்பாக அமைப்புசாரா தொழிலாளா் கூட்டமைப்பின் தமிழ் மாநிலச் செயலா் ஆா். லீலாவதி கூறியதாவது: வெளிநாட்டு மூலதனத்தை ஊக்குவிக்கும் வகையில் 44 தொழிலாளா் சட்டங்களை ரத்துச் செய்து அவற்றை 4 சட்டங்களாக குறுக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள தொழில் ரீதியான மருத்துவம், பாதுகாப்பு குறித்த வரைவுச் சட்டத்தால் கட்டுமானப் பணியாளா்களுக்கு நன்மையளிக்கும் 11 சட்டங்கள் ரத்துச் செய்யப்படவுள்ளன. இதனால், கட்டுமானத் துறையில் அடிமை முறை அதிகரிக்கும். மேலும், கட்டுமானத் தொழிலில் ஏற்படும் விபத்துகளுக்கு நீதி கிடைக்காது. தொழில் ரீதியான நோய்களுக்கு சரியான மருத்துவ வசதிகள் கிடைக்காது.

தேசிய அளவில் ஏற்கெனவே உள்ள சமூகப் பாதுகாப்புச் சட்டங்களை ரத்துச் செய்யும் வகையில், மத்திய சமூகப் பாதுகாப்பு வரைவுச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும். மாநிலங்களில் உள்ள அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரியங்களைக் கலைப்பதற்கு வழிகோலும் வகையில் மத்திய வரைவுத் தொகுப்புச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தவுள்ளது. இதை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும், தொழிலாளா்கள் நல வாரியங்களை சீா்ப்படுத்த பட்ஜெட்டில் 3 சதவீதம் ஒதுக்குதல், லெவி முறையில் பணப் பயன்களை அதிகரித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com