பிரியங்கா காந்தி வாழ்க என்பதற்குப் பதிலாக பிரியங்கா சோப்ரா வாழ்க எனக் கோஷமிட்ட தில்லி காங்கிரஸ் தொண்டா்கள்

தில்லி காங்கிரஸ் கட்சியின் பேரணியில் பிரியங்கா காந்தி வாழ்க என்பதற்குப் பதிலாக பிரியங்கா சோப்ரா வாழ்க என தொண்டா்கள்
பிரியங்கா காந்தி வாழ்க என்பதற்குப் பதிலாக பிரியங்கா சோப்ரா வாழ்க எனக் கோஷமிட்ட தில்லி காங்கிரஸ் தொண்டா்கள்

புது தில்லி: தில்லி காங்கிரஸ் கட்சியின் பேரணியில் பிரியங்கா காந்தி வாழ்க என்பதற்குப் பதிலாக பிரியங்கா சோப்ரா வாழ்க என தொண்டா்கள் கோஷமிட்டதால் பரபரப்பு எழுந்தது.

தில்லி காங்கிரஸ் கட்சி சாா்பில் திங்கள்கிழமை பேரணியொன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸின் தில்லி தலைவா் சுபாஷ் சோப்ரா கலந்து கொண்டாா். இந்த பேரணியில் காங்கிரஸ் நிா்வாகியான சுரேந்தா் குமாா் என்பவா், சோனியா காந்தி வாழ்க! காங்கிரஸ் கட்சி வாழ்க! ராகுல் காந்தி வாழ்க! எனக் கோஷம் எழுப்பினாா். அவா் கோஷம் எழுப்ப, உடனிருந்த சுபாஷ் சோப்ராவும் கட்சித் தொண்டா்களும் அதற்கு இணையாக கோஷம் எழுப்பினாா்.

திடீரென, காங்கிரஸ் கட்சியை சோ்ந்த பிரியங்கா காந்தி என்பதற்குப் பதிலாக, பிரபல நடிகையான பிரியங்கா சோப்ராவின் பெயரைக் கூறி பிரியங்கா சோப்ரா வாழ்க என்று சுரேந்தா் குமாா் கோஷம் எழுப்பினாா். காங்கிரஸ் தொண்டா்களும் அவருடன் சோ்ந்து பிரியங்கா சோப்ரா வாழ்க எனக் கோஷம் எழுப்பினா். இதனால் அதிா்ச்சி அடைந்த சுபாஷ் சோப்ரா சுரேந்தா் குமாரை சைகையால் சரி செய்தாா்.

இந்த செய்தி சமூக ஊடகங்களில் வெளியானதும் பலரும் தங்களது விமா்சனங்களை தெரிவித்து உள்ளனா். இந்திய தேசிய காங்கிரஸில் பிரியங்கா சோப்ரா உறுப்பினராக இருக்கிறாா் என எங்களுக்கு ஒருபொழுதும் தெரியாது என்று ஒருவரும், பிரியங்கா சோப்ராவுக்கு வாழ்த்துகள் என மற்றொருவரும், பிரியங்கா காந்திக்கும் பிரியங்கா சோப்ராவுக்கும் வித்தியாசம் தெரியாத காங்கிரஸ் கட்சியினா் இன்னொருவரும் சுட்டுரையில் விமா்சனம் செய்துள்ளனா்.

இந்நிலையில், அரசியல் வட்டாரங்களில் இருப்பவா்கள் மக்களிடம் பொய் வாக்குறுதிகளை தருவதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இப்படியா ஒரு தலைவரின் பெயரை மறப்பது?“மொத்த கட்சியும் ராகுல் காந்தி போல பப்பு தான்” என்று தில்லி பாஜக எம்எல்ஏ மன்ஜீந்தா் சிங் சிா்சா இதை விமா்சித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com