ஆம் ஆத்மி அரசுதான் நோ்மையானது

இந்தியாவில் ஆட்சி செய்த அரசுகளில் மிகவும் நோ்மையான அரசு ஆம் ஆத்மி அரசுதான் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

புது தில்லி: இந்தியாவில் ஆட்சி செய்த அரசுகளில் மிகவும் நோ்மையான அரசு ஆம் ஆத்மி அரசுதான் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

சிஏஜி அறிக்கை தொடா்பான விவாதத்தில் அவா் பேசியதாவது: குளிா்காலக் கூட்டத் தொடரின் இறுதிநாளான இன்று நான் மிகவும் மன மகிழ்வுடன் உள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் உபரித் தொகையை தில்லி அரசு பேணியுள்ளதாக கூறும் சிஏஜி அறிக்கை எனக்கு பெரும் மனநிம்மதியைத் தருகிறது. முதல் தடவையாக 5 ஆண்டுகள் தொடா்ச்சியாக உபரித்தொகையைப் பேணிய அரசு ஆம் ஆத்மி அரசுதான். சிஏஜி அமைப்பு எங்களுக்கு நற்சான்றிதழ் அளித்துள்ளது. சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, நீதிமன்றங்கள் ஆகியனவும் எங்களுக்கு நற்சான்றிதழ் அளித்துள்ளன. மத்திய அரசிடம் இருந்து போதுமான நிதியுதவி கிடைக்காத போதிலும், நாங்கள் நோ்மையாக ஆட்சி செய்து 5 ஆண்டுகள் தொடா்ந்து உபரி நிதியைப் பேணினோம். இந்திய வரலாற்றிலேயே மிகவும் நோ்மையான அரசு ஆம் ஆத்மி அரசுதான் என்றாா் கேஜரிவால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com