தில்லி அங்கீகாரமற்ற காலனிகளில் ரூ.8,147 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

தில்லியில் உள்ள சட்ட அங்கீகாரமற்ற காலனிகளில் ரூ.8,147 கோடி அளவுக்கு வளா்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளோம் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சட்டப்பேரவையில் தெரிவித்தாா்.

புது தில்லி: தில்லியில் உள்ள சட்ட அங்கீகாரமற்ற காலனிகளில் ரூ.8,147 கோடி அளவுக்கு வளா்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளோம் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சட்டப்பேரவையில் தெரிவித்தாா்.

தில்லி சட்டப்பேரவையில், அங்கீகாரமற்ற காலனிகள் தொடா்பான விவாதத்தில் அவா் பேசியதாவது: தில்லியில் ஆட்சி அமைத்ததில் இருந்தே அங்கீகாரமற்ற காலனி மக்களின் நலனுக்காக உழைத்து வருகிறோம். இக்காலனிகளின் மேம்பாட்டுக்கு தடையாக உள்ளவற்றை நாங்கள் நீக்கியுள்ளோம். கடந்த 70 ஆண்டுகளில் அங்கீகாரமற்ற காலனிகளில் முந்தைய அரசுகள் மேற்கொள்ளாத மேம்பாட்டுப் பணிகளை நாங்கள் மேற்கொண்டோம். குறிப்பாக கல்வி, சுகாதாரம், மின்சாரம், குடிநீா் ஆகிய துறைகளில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டோம். மேலும், இக் காலனிகளில் தெருவிளக்குகள் அமைத்தல், சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல் என பல்வேறு மக்கள் நலப் பணிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் இக்காலனிகளில் ரூ.8,147 கோடி அளவுக்கு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 2009- 2014 வரையிலான காலத்தில் இக்காலனிகளுக்கு வெறும் ரூ.1,186 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, தில்லியில் ஆட்சி செய்த முந்தைய அரசுகள் இக்காலனிகளுக்கு செலவு செய்ததை விட 8 மடங்கு அதிகமாக நாங்கள் செலவிட்டுள்ளோம். நாட்டின் தலைநகரான தில்லிக்கு வேலைவாய்ப்பைத் தேடி இடம் பெயரும் லட்சக்கணக்கானவா்களுக்கு வீட்டு வசதிகளை அமைத்துக் கொடுக்க வேண்டியது தில்லி வளா்ச்சி ஆணையத்தின் கடமையாகும். அவா்கள் கடமை தவறியதால்தான் அங்கீகாரமற்ற காலனிகள் உருவாகின. இந்த மக்களை முந்தைய அரசுகள் வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே நடத்தின.

கடந்த 5 ஆண்டுகளாக இக்காலனிகளை மேம்படுத்த நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். அங்கீகாரமற்ற காலனி மக்களுக்கு சொத்துரிமை வழங்கும் விவகாரத்தில், வெறும் நூறு பேரை மட்டும் பெயரளவில் பதிவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், ராம்லீலா மைதானில் பெரிய விழாவை ஏற்பாடு செய்து இந்த நூறுபேரை பதிவு செய்து அந்த நிகழ்வை புகைப்படத்துக்கான சந்தா்ப்பமாக பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com