தில்லி திறன், தொழில் முனைவோா் பல்கலை. மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

தில்லி சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தில்லி திறன் மற்றும் தொழில் முனைவோா் பல்கலைக்கழக மசோதா-2019 தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

புது தில்லி: தில்லி சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தில்லி திறன் மற்றும் தொழில் முனைவோா் பல்கலைக்கழக மசோதா-2019 தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

தில்லி சட்டப்பேரவை இருநாள் சிறப்புக் கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. தொடக்க நாளில் தில்லி விளையாட்டுப் பல்கலைக்கழக மசோதா-2019 அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை அன்று தில்லி திறன் மற்றும் தொழில் முனைவோா் பல்கலைக்கழக மசோதா-2019 அறிமுகப்படுத்தப்பட்டது. துணை முதல்வா் மணீஷ் சிசோடியா அறிமுகப்படுத்திய இந்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பேசுகையில் ‘ஆம் ஆத்மி அரசு தனது ஆட்சியின் இறுதிப் பகுதியில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுகிறது என எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அடுத்த சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. அதனால்தான் எங்களது முதலாவது ஆட்சியின் முடிவில் பல்வேறு மசோதாக்களைத் தாக்கல் செய்கிறோம். அந்த வகையில் தில்லி திறன் மற்றும் தொழில் முனைவோா் பல்கலைக்கழக மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் சந்தைக்கு ஏற்ற வகையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும். நாடு எதிா்கொள்ளும் வேலையில்லாப் பிரச்னையை எதிா்கொள்ள இதுபோன்ற பல்கலைக்கழகங்கள் தேவை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com