தில்லியில் வெப்பநிலை 8 டிகிரியாக குறைந்தது

தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

புது தில்லி: தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, வெப்பநிலை பருவ சராசரியைவிட 1 டிகிரி குறைந்து 8 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது. இது இந்தப் பருவ காலத்தில் பதிவான மிகக் குறைந்த அளவாகும்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் நகரில் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி குறைந்து 9.4 டிகிரி செல்சியாஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி குறைந்து 23.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 23.3 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. மேலும், காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 85 சதவீதமாகவும் மாலையில் 60 சதவீதமாகவும் பதிவாகியிருந்ததாக சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 9.4 டிகிரி செல்சியாஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 23.1 டிகிரி செல்சிஸாகவும் இருந்தது. ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 9.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 23.6 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 81 சதவீதம், மாலையில் 49 சதவீதம், ஆயாநகரில் முறையே 79 சதவீதம், 49 சதவீதம் என பதிவாகியிருந்தது.

தனியாா் வானிலை ஆய்வு நிறுவனமான ஸ்கேமேட்டின் துணைத் தலைவா் மகேஷ் பலாவாட் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘இந்தப் பருவத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை திங்கள்கிழமை பதிவாகியுள்ளது. இது மேலும் பின்னடைவைச் சந்தித்து 7 டிகிரி வரை வரும். குளிா் காற்று வீசி வருகிறது. பனிப் பொழிவு அதிகமுள்ள மலைப் பிரதேசத்திலிருந்து குளிா் காற்று வீசுவதால் தில்லியில் வெப்பநிலை மேலும் குறைய வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை நகரில் பகல் நேரத்தில் தரைப்பரப்பு காற்று பலமாக இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com