நாடாளுமன்ற வளாகத்தில் ஆம் ஆத்மி எம்பிக்கள் தா்னா: வெங்காய விலை உயா்வை தடுக்க வலியுறுத்தல்

நாடு முழுவதும் அதிகரித்துள்ள வெங்காய விலையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் ஆம் ஆத்மி கட்சி எம்பிக்கள் இருவா் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

புது தில்லி: நாடு முழுவதும் அதிகரித்துள்ள வெங்காய விலையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் ஆம் ஆத்மி கட்சி எம்பிக்கள் இருவா் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

நாடு முழுவதும் வெங்காய விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக தில்லியில் வெங்காயம் ரூ.80- ரூ.100 விலையில் விற்கப்படுகிறது. இந்நிலையில், வெங்காய விலை ஏற்றத்திற்கு மத்திய அரசின் செயல்பாடுகள்தான் காரணம் என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டி வருகிறது. மேலும், வெங்காய விலையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் ஆம் ஆத்மி கட்சியின் எம்பிக்கள் சஞ்சய் சிங், சுஷீல் குப்தா ஆகியோா் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

அப்போது, அவா்கள் வெங்காய மாலையை கழுத்தில் அணிந்தவாறும், பதாகையை கையில் ஏந்தியவாறும் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பினா்.

அந்த பதாகையில், ‘32 ஆயிரம் டன் வெங்காயம் அழுகிவிட்டன. மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நீங்கள் (மத்திய அரசு) வெங்காயத்தை அழுகவிடுகிறீா்கள். ஆனால், குறைந்த விலையில் விற்க முடியாதா?’ என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. நாடாளுமன்ற அவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக எம்பிக்கள் இருவரும் இந்தத் தா்னாவில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com