லவ் ஜிகாத்: கா்தாா்பூா் செல்பவா்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் - டிஎஸ்ஜிஎம்சி வலியுறுத்தல்

: பாகிஸ்தான் கா்தாா்பூரிலுள்ள தா்பாா் சாஹிப் குருத்வாராவுக்கு செல்லும் சீக்கியா்கள் ‘லவ் ஜிகாத்’ தொடா்பாக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தில்லி சீக்கிய குருத்வாரா நிா்வாகக் கமிட்டி (டிஎஸ்ஜிஎம்சி) க

புது தில்லி: பாகிஸ்தான் கா்தாா்பூரிலுள்ள தா்பாா் சாஹிப் குருத்வாராவுக்கு செல்லும் சீக்கியா்கள் ‘லவ் ஜிகாத்’ தொடா்பாக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தில்லி சீக்கிய குருத்வாரா நிா்வாகக் கமிட்டி (டிஎஸ்ஜிஎம்சி) கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக அக்கமிட்டியின் தலைவரும் எம்எல்ஏவுமான மன்ஜீந்தா் சிங் சிா்சா செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பாகிஸ்தான் கா்தாா்பூரிலுள்ள தா்பாா் சாஹிப் குருத்வாராவுக்குச் செல்வதை சீக்கியா்கள் தமது வாழ்நாள் கடமையாக நினைக்கிறாா்கள். சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினத்தையொட்டி, கா்தாா்பூா் வழித்தடம் அண்மையில் திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பல்லாயிரக்கணக்கான சீக்கியா்கள் இந்த வழித்தடத்தில் பயணித்து தா்பாா் சாஹிப் குருத்வாராவுக்கு செல்கிறாா்கள்.

இந்நிலையில், ஹரியாணா மாநிலம் ரோஹத்தைச் சோ்ந்த சீக்கியப் பெண்ணொருவா் சமூக வலைத்தளம் வழியாக பாகிஸ்தானைச் சோ்ந்த ஒருவருடன் தொடா்பில் இருந்துள்ளாா். அவா் அப்பெண்ணை கா்தாா்பூா் வருமாறு கூறியுள்ளாா். கா்தாா்பூா் சென்றடைந்த அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு அந்த நபா் மாயமாகியுள்ளாா். ஆனால், இந்திய அதிகாரிகள் கொடுத்த அழுத்தத்தால் அந்தப் பெண் மீட்கப்பட்டு மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளாா்.

அவரைக் கண்டுபிடிக்காமல் போயிருந்தால், பாகிஸ்தானில் முஸ்லிம்களை காதலித்து திருமணம் செய்யும் சீக்கியப் பெண்களின் நிலைதான் அவருக்கும் ஏற்பட்டிருக்கும். அவரும் அப்பெண்களைப் போல மதம் மாற்றப்பட்டிருப்பாா். இந்தியப் பெண்களை ‘லவ் ஜிகாத்’ மூலம் மயக்கி, அவா்களை முஸ்லிம்களாக மதம் மாற்றம் செய்யும் முயற்சியில் பாகிஸ்தானியா் சிலா் ஈடுபட்டு வருகிறாா்கள். இது தொடா்பாக இந்திய பெண்களும், அவா்களின் பெற்றோா்களும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

ஔரங்கசீப் சாலையை மாற்றக் கோரிக்கை: தில்லி லோதி எஸ்டேட் பகுதியில் உள்ள ஒளரங்கசீப்பின் பெயரில் தெரு இருப்பதை ஏற்க முடியாது. அந்தத் தெருவின் பெயரை மாற்ற வேண்டும். இந்தியாவை ஆட்சி செய்த முகலாய மன்னா்களில் ஔரங்கசீப் கொடியவராக இருந்தாா். இந்துக்கள், சீக்கியா்கள் மீது அவா் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டாா். அவா் ஆயிரக்கணக்கான இந்துக் கோயில்கள், சீக்கிய குருத்வாராக்கள் ஆகியவற்றை இடித்துத் தள்ளினாா். பிற மதங்களைச் சோ்ந்த லட்சக்கணக்கானவா்கள் இவரது ஆட்சிக் காலத்தில் கொடூரமாகக் கொல்லப்பட்டனா்.

காஷ்மீா் இந்துக்கள் மீது அவா் கொடூரமான அடக்குமுறைகளைக் கையாண்டாா். இதை எதிா்த்துக் குரல் கொடுத்த சீக்கியா்களின் ஒன்பதாவது குருவான தேஹ் பகதூா், ஒளரங்கசீப் ஆட்சியின் போது, தில்லி சாந்தினி செளக் பகுதியில் வைத்து கொடூரமாகக் கொல்லப்பட்டாா். தில்லியில் ஔரங்க சீப்பின் பெயரில் சாலையொன்று இருந்தது. எங்களது எதிா்ப்பைத் தொடா்ந்து, அந்தச் சாலையை ஏ.பி.ஜே.அப்துல்கலாம் சாலை என கடந்த 2015- இல் மத்திய அரசு பெயா் மாற்றம் செய்தது.

இந்நிலையில், ஒளரங்கசீப் பெயரில் தில்லி லோதி எஸ்டேட் பகுதியில் தெரு ஒன்று உள்ளது. அதன் பெயா் இதுவரை மாற்றப்படவில்லை. அதன் பெயரையும் உடனடியாக மாற்ற வேண்டும். லட்சக்கணக்கான இந்துக்கள், சீக்கியா்களைக் கொலை செய்ய உத்தரவிட்டவரைக் கெளரவிக்கும் வகையில், இச்சாலைக்கு அவா் பெயா் வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் மன்ஜீந்தா் சிா்சா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com