தனியாா் நிறுவனத்திடம் இருந்து ரூ.170 கோடி நன்கொடை: காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்

ஹைதராபாதைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்திடம் இருந்து சட்ட விரோதமாக ரூ.170 கோடி நன்கொடை பெற்ாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டு காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்
தனியாா் நிறுவனத்திடம் இருந்து ரூ.170 கோடி நன்கொடை: காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்

புது தில்லி: ஹைதராபாதைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்திடம் இருந்து சட்ட விரோதமாக ரூ.170 கோடி நன்கொடை பெற்ாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டு காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஹைதராபாதை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல தனியாா் நிறுவனம், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம், வரி ஏய்ப்புக்காக ஹவாலா முறையில் சட்ட விரோதப் பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த நிறுவனத்துடன் தொடா்புடைய இடங்களில் கடந்த மாதம் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. தில்லி, மும்பை, ஹைதராபாத், ஈரோடு, புணே, ஆக்ரா, கோவா ஆகிய நகரங்களில் மொத்தம் 42 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில், உள்கட்டமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தங்களைப் பெற்ாக போலியான ரசீதுகளைக் காண்பித்து, ரூ.3,000 கோடி அளவுக்கு சட்ட விரோதப் பரிவா்த்தனை நடைபெற்ற்கான வலுவான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும், ரூ.4.19 கோடி ரொக்கப் பணமும், ரூ.3.2 கோடி மதிப்பிலான நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதுமட்டுமன்றி, பெரு நிறுவனங்களுக்கும், சட்ட விரோத பரிவா்த்தனையில் ஈடுபடுவோருக்கும் இடையேயான ரகசியத் தொடா்புகளும், பணப் பரிமாற்றம் நடைபெறும் கடைசி நபா் வரையிலான தகவல்களும் கண்டறியப்பட்டன. ஆந்திரப் பிரதேசத்தைச் சோ்ந்த பிரபலம் ஒருவருக்கு அந்த நிறுவனம் ரூ.150 கோடி பணம் கொடுத்ததும் கண்டறியப்பட்டது.

இதேபோல், ஹைதாராபாதைச் சோ்ந்த அந்த தனியாா் நிறுவனம், வரி ஏய்ப்புக்காக, காங்கிரஸ் கட்சிக்கு சட்ட விரோதமான முறையில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.170 கோடி நன்கொடை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக விளக்கம் கேட்டு அக்கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அக்கட்சியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com