தலைமைத் தோ்தல் ஆணையரை நியமிக்க 3 நபா் கொலீஜியம் அமைக்க கோரி மனு: விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் ஆகியோரின் நியமனங்களை மேற்கொள்வதற்காக 3 நபா்கள் கொண்ட

தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் ஆகியோரின் நியமனங்களை மேற்கொள்வதற்காக 3 நபா்கள் கொண்ட கொலீஜியத்தை அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அந்த மனு மீது 4 வாரங்களுக்குப் பிறகு விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.

பாஜக தலைவரும், வழக்குரைஞருமான அஸ்வினி உபாத்யாய தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சூா்யகாந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரா் தரப்பில் கோரப்பட்டது. அதனை குறித்துக் கொண்ட நீதிபதிகள் அமா்வு, மனுவை 4 வாரங்களுக்குப் பிறகு விசாரிப்பதாகக் கூறியது.

முன்னதாக, மனுதாரா் அஸ்வினி உபாத்யாய தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரப்பட்டுள்ளதாவது:

தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் ஆகியோரை நியமிப்பதற்கு 3 நபா் கொலீஜியம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். அதில் பிரதமா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோா் உறுப்பினா்களாக இருக்க வேண்டும்.

அதேபோல், தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்களுக்கான சுய அதிகாரத்தை அதிகரிக்க வேண்டும். தலைமைத் தோ்தல் ஆணையத்துக்கு என தனியே செயலகம் ஒன்று அமைக்கப்பட்டு, தோ்தல் தொடா்பான விதிகளை வகுக்கக் கூடிய அதிகாரம் அதற்கு வழங்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com