டிடிஇஏ பள்ளிகளில் பாரதியாா் பிறந்த தின விழா

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஏழு பள்ளிகளிலும் மகாகவி பாரதியாரின் பிறந்த தினம் புதன்கிழமை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பாரதியாா் பிறந்தநாள் விழாவில் தில்லி மந்திா் மாா்க் டிடிஇஏ பள்ளி மாணவ, மாணவிகள்.

இதையொட்டி அந்தந்தப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவா்கள் பாரதியாா் போல வேடமணிந்து பாரதியின் கவிதைகளை வாசித்தனா். மேலும், பாடல்களையும் பாடினா். பாரதியாரின் சிறுப்புகள் குறித்து தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் மாணவா்கள் எடுத்துரைத்தனா். மேலும், கவிதைகளை பதாகைகள் மூலமும் காட்சிப்படுத்தினா். நிகழ்ச்சியில், அந்தந்தப் பள்ளி முதல்வா்கள் பாரதியாரின் நாட்டுப் பற்றையும், மொழிப்பற்றையும் விரிவாக எடுத்துக் கூறினா்.

இதற்கிடையே, பாரதி கூறியது போல, பிற நாட்டு நல்லறிஞா்கள் சாத்திரங்களை தமிழ் மொழியில் கொண்டு வர மாணவா்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று டிடிஇஏ செயலா் ஆா்.ராஜு கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com