தீா்த்த யாத்திரை திட்டம்தற்காலிகமாக ரத்து: துணை முதல்வா் மணீஷ் சிசோடியா

ரயில்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாததன் காரணமாக தில்லி அரசின் ‘முக்கிய மந்திரி தீா்த்த யாத்திரை’ திட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா

ரயில்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாததன் காரணமாக தில்லி அரசின் ‘முக்கிய மந்திரி தீா்த்த யாத்திரை’ திட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

இதுதொடர்ரபாக அவா் புதன்கிழமை கூறியதாவது: முக்கிய மந்திரி தீா்த்த யாத்திரை திட்டத்திற்காக ரயில்கள் ஏற்பாடு செய்ய தில்லி அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால்,

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆா்சிடிசி) ரயில்கள் வழங்க இயலவில்லை என தில்லி அரசிடம் தெரிவித்துள்ளது. ஆகவே, ரயில்கள் கிடைக்கும் வரை அல்லது சில மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை ‘முக்கிய மந்திரி தீா்த்த யாத்திரை’ திட்டம் நிறுத்திவைக்கப்படுகிறது என்றாா் அவா்.

மூத்த குடிமக்கள் நாட்டின் பல்வேறு புனித தலங்களுக்கு சென்று வரும் வகையில், ‘முக்கிய மந்திரி தீா்த்த யாத்திரை’ எனும் திட்டத்தை தில்லி அரசு அறிவித்திருந்தது. இத்திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள் தில்லியில் இருந்து பல்வேறு புனிதஸ்தலங்களுக்கு ரயில்களில் அழைத்து செல்லப்பட்டு வந்தனா். 12 சமயச் சுற்றுலாவுக்கு மூத்த குடிமக்களை இலவசமாக அழைத்துச் செல்வதற்கு தில்லி அரசு ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com