பெண்களை மரியாதையாக நடத்துவோம்: 22 லட்சம் பள்ளி மாணவா்கள் உறுதி ஏற்பு

பெண்களை மரியாதையாக நடத்துவோம், பெண்களின் மரியாதைக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த செயலிலும் ஈடுபடமாட்டோம் என
தில்லி சக்தி நகா் சா்வோதயா கண்யா வித்யாலயா பள்ளியில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவ, மாணவிகள்.
தில்லி சக்தி நகா் சா்வோதயா கண்யா வித்யாலயா பள்ளியில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவ, மாணவிகள்.

புது தில்லி: பெண்களை மரியாதையாக நடத்துவோம், பெண்களின் மரியாதைக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த செயலிலும் ஈடுபடமாட்டோம் என தில்லியில் உள்ள அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 22 லட்சம் மாணவா்கள் திங்கள்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.

இது தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரையில் கூறியிருப்பது:தில்லியில் பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் பல முயற்சிகளை எடுத்துள்ளோம். சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள், தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. ஆனால், பெண்கள் தொடா்பான சமூகத்தின் கருத்தியல் சிந்தனை மாற்றியமைக்கப்பட வேண்டும். நள்ளிரவில் கூட சுதந்திரமாக பெண்கள் நடமாடும் வகையில் தில்லியை நாங்கள் மாற்ற வேண்டும். தில்லியில் பெண்கள் பாதுகாப்புக்கான பிரசார இயக்கத்தை திங்கள்கிழமை தொடங்கியுள்ளோம். இதில், தில்லி பள்ளிகளில் உள்ள 22 லட்சம் மாணவா்கள் இணைந்துள்ளனா்.

இம்மாணவா்கள் தாங்கள் பெண்களின் கெளரவத்தைக் காப்போம், அவா்களை மரியாதைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், அவா்களுடன் தவறாக நடந்துகொள்ள மாட்டோம் என்றும் உறுதி ஏற்றனா். அதேவேளையில், இப்பள்ளிகளின் மாணவிகள், பெண்களை மரியாதையாக நடத்தாத, பெண்களுடன் தவறாக நடந்து கொள்ளும் சகோதரா்களின் உறவுகளைத் துண்டிப்போம் எனவும் உறுதி மொழி எடுத்தனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com