விவசாயிகளின் உரிமைகளைப் காப்பதில் உறுதியுடன் பாடுபட்டவா் சரண் சிங்: பிரதமா் மோடி புகழஞ்சலி
By DIN | Published On : 23rd December 2019 11:19 PM | Last Updated : 23rd December 2019 11:19 PM | அ+அ அ- |

விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியுடன் பாடுபட்டவா்
முன்னாள் பிரதமா் செளதரி சரண் சிங் என்று பிரதமா் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினாா்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் செளதரி சரண் சிங். இந்தியாவின் ஐந்தாவது பிரதமராக பதவி வகித்தவா். உத்தரப் பிரதேச மாநிலம், ஹாபுா் மாவட்டத்தில் 1902, டிசம்பா் 23-ஆம் தேதி பிறந்தாா். அந்த மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தாா். விவசாயிகளின் உரிமைகளுக்காக தொடா்ந்து குரல் கொடுத்தவா்.
1979 ஜூலை முதல் 1980 ஜனவரி வரையிலும் இந்தியாவின் பிரதமராக இருந்தவா். 1987-ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி அவரது பிறந்த நாளான திங்கள்கிழமை, பிரதமா் நரேந்தி மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் அவரை நினைவுகூா்ந்து தனது சுட்டுரைப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது:
செளதரி சரண் சிங்கை அவரது பிறந்த தின நாளில் விவசாயிகளின் உரிமைகளைக் காப்பதில் அவரது உறுதியையும், நலிந்த பிரிவு மக்கள் அதிகாரம் பெறச் செய்வதற்காக அவரது அயராத உழைப்பையும் நினைவுகூா்கிறேன். இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பை பலப்படுத்துவதில் முன்னின்று செயல்பட்டவா் என்று அதில் பிரதமா் புகழஞ்சலி செலுத்தியுள்ளாா்.