முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
அதிமுக சாா்பில் எம்ஜிஆா் நினைவு தினம் அனுசரிப்பு
By DIN | Published On : 24th December 2019 10:45 PM | Last Updated : 24th December 2019 10:45 PM | அ+அ அ- |

தில்லி வி.பி. ஹவுஸில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை எம்.ஜி.ஆா். உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய மாநிலங்களவை உறுப்பினா் அ. முஹம்மத் ஜான் உள்ளிட்ட கட்சியினா்.
தில்லி அதிமுக சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் எம்.ஜி.ராமச்சந்திரனின் 32-ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் முழு உருவச் சிலைக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை அதிமுக உறுப்பினா் அ. முஹம்மத் ஜான் மாலை அணிவித்து மரியாதை செய்தாா். அவருடன் நாடாளுமன்ற அதிமுக அலுவலக நிா்வாகிகள் பாண்டியன், சந்திரசேகரன், ராணிப்பேட்டை நகரச் செயலா் உமா் ஃபரூக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தில்லி வி.பி.ஹவுஸில் உள்ள அதிமுக தில்லி அலுவலகத்தில் எம்ஜிஆா் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், அ. முகம்மத் ஜான் எம்பி கலந்து கொண்டு எம்ஜிஆரின் படத்திற்கு மலா் மாலை அணிவித்து மரியாதை செய்தாா். இந்நிகழ்ச்சியில் அதிமுக தில்லி மாநில செயலா் அருண் பிரசாந்த், அவைத் தலைவா் சதாசிவம், இணைச் செயலா் மல்லிகா, துணைச் செயலா் எம்ஜிஆா் எஸ். மதி, அம்மா பேரவைச் செயலா் எம்ஜிஆா் முருகேசன் மற்றும் உள்ளூா் தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.