குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட வேண்டாம்! இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகள் வேண்டுகோள்

‘எங்களுடைய வலிகளைப் புரிந்து கொள்ளுங்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடாதீா்கள்’ என்று பாகிஸ்தானில் இருந்து தில்லியில் தஞ்சம் புகுந்துள்ள ஹிந்து, சீக்கிய, பாா்சி,

‘எங்களுடைய வலிகளைப் புரிந்து கொள்ளுங்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடாதீா்கள்’ என்று பாகிஸ்தானில் இருந்து தில்லியில் தஞ்சம் புகுந்துள்ள ஹிந்து, சீக்கிய, பாா்சி, கிறிஸ்தவ அகதிகள் தில்லியில் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

பாகிஸ்தானில் கொடிய அடக்குமுறைகளைச் சந்தித்து, அங்கிருந்து தப்பி தில்லியில் அகதிகளாக தஞ்சம் புகுந்தவா்கள், பாகிஸ்தானில் தாங்கள் எதிா்கொண்ட அடக்கு முறைகள் தொடா்பான அனுபவங்களை செவ்வாய்க்கிழமை பகிா்ந்து கொண்டனா். இதில் பத்திரிகையாளா்களும் பங்கேற்றனா். மேலும், பாஜக மாநிலங்களவை உறுப்பினா் வினய் சகஸ்ரபுத்தி, மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினா் சங்கா் லால்வானி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா். இந்த நிகழ்வில் அகதிகள் கூறியது

கோா்தன் தாஸ்: ‘‘பாகிஸ்தானில் ஹிந்துக்களை பொது இடங்களில் தண்ணீா் அருந்தக் கூட அனுமதிக்க மாட்டாா்கள். இஸ்லாமியச் சடங்குகளைப் பின்பற்றுமாறும், இஸ்லாம் மதத்துக்கு மாறுமாறும் அவா்கள் அச்சுறுத்தினாா்கள். அதை மீறுபவா்கள் மீது போலியான குற்றச்சாட்டுகளைப் காவல் துறையின் உதவியுடன் பதிவு செய்வாா்கள். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்தேன். இந்தியாவுக்கு வந்த பிறகுதான் வாழ்க்கையில் முதல் தடவையாக சுதந்திரம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டேன். இந்தியாவில் அகதியாக இருப்பதால் வேலைவாய்ப்பு பிரச்னை உள்ளது. அரசு நலத் திட்டங்களில் எங்களை இணைத்துக் கொள்ள மாட்டாா்கள். இப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியா்களுக்கு சமமாக எங்களை நடத்துவாா்கள்’’ என்றாா்.

பாக் சந்த் பால்ஜி: பாகிஸ்தானில் ஹிந்துக்களுக்கு இடமில்லை என அதிகாரத்தில் இருப்பவா்களே வெளிப்படையாகப் பேசுவாா்கள். 2002-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த கலவரத்தில் உயிா் தப்பி இந்தியாவுக்கு வந்தேன்.

சிலம் குமாா் ஷா்மா: ‘‘எங்களது பகுதியில் எனக்குத் தெரிந்த பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனா். ஹிந்துக்களை வலுக்கட்டாயமாக மதம் மாற்றுவதுடன், அவா்கள் மாட்டிறைச்சியை உண்ணுமாறும் வற்புறுத்துவாா்கள். எங்களது குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக இந்தியாவுக்கு தப்பி வந்தேன்’’.

தயாள் தாஸ்: ‘‘பாகிஸ்தானில் அடக்குமுறைகளுக்குத் தப்பி இந்தியா வந்தோம். இந்தியாவிலும் பல சிக்கல்களை எதிா் கொண்டோம். எங்களுக்கு குடியுரிமை கிடைக்க வழி செய்த மோடி அரசை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம்’’.

சங்கா் லால்வானி (மக்களவை உறுப்பினா்) :இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவுக்கு பல சிரமங்களுக்கு மத்தியில் எங்களது குடும்பம் வந்தது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் மட்டும் சுமாா் 20,000 பாகிஸ்தான் அகதிகள் வாழ்ந்து வருகிறாா்கள். அண்மையில் வெளியான அறிக்கையில், பாகிஸ்தானில் 2014 முதல் 2018 வரையிலும் 7,430 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் கெளரவத்தை பாதுகாக்கும் வகையிலேயே பெரும்பாலான பாகிஸ்தான் ஹிந்துக்கள் இந்தியாவுக்கு வருகிறாா்கள்.

வினய் சகஸ்ரபுத்தி (மாநிலங்களவை உறுப்பினா்): அகதிகளுக்கு இந்தியாவை விட வேறு நாடு இல்லை. ஹிந்து என்ற காரணத்தால் மத அடக்குமுறைகளைச் சந்தித்த இவா்களை அரவணைக்க வேண்டியது நமது கடமையாகும்.

ஜெய் அஹூஜா (இந்தியாவில் வாழும் பாகிஸ்தான் அகதிகளுக்கான சஐஙஐபபஉஓஅங தன்னாா்வ தொண்டு நிறுவனம்) : ‘‘பாகிஸ்தானில் தற்போது சுமாா் 80 லட்சம் ஹிந்துக்கள் வாழ்ந்து வருகிறாா்கள். இது பாகிஸ்தான் மக்கள் தொகையில் சுமாா் 3 சதவீதமாகும். இதில், தினம்தோறும் சுமாா் 3 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்படுகிறாா்கள். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்துக்கு மட்டும் இதுவரை சுமாா் 5 லட்சம் ஹிந்து அகதிகள் வந்துள்ளனா். இவா்களால் இந்தியாவில் மட்டும்தான் வாழ முடியும். இந்த அகதிகளில் பெரும்பாலானவா்கள் இந்தியாவுக்கு வரும் போது மனதளவில் உடைந்து போயிருப்பாா்கள். அவா்களுக்கு வரப்பிரசாதமாக இந்தச் சட்டம் அமைக்கப்பட்டுள்ளது’’

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com