சுடச்சுட

  

  நிதி சேவை, சினிமா சட்டத்திருத்த மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல்

  By DIN  |   Published on : 13th February 2019 06:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திரைப்பட திருட்டில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் வரையில் அபராதம் விதிக்க வகை செய்யும் திரைப்பட ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
  அதேபோல, சர்வதேச நிதி சேவை மையங்களை நிர்வகிக்க ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க வகை செய்யும் மசோதாவும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  திரைப்படங்கள் திருடப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்படுவதால், திரைத்துறைக்கும், அரசுக்கும் ஏராளமான வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால், அதனை தண்டனைக்குரிய குற்றமாக்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
  அதன்படி, திரைப்படங்களை கேமிராக்களில், காப்புரிமையாளரின் அனுமதியின்றி பதிவு செய்வது, அத்திரைப்படத்தின் நகலை வெளியிடுவது போன்றவற்றை குற்றச்செயல்களாகக் கருதும் வகையில் 1952ம் ஆண்டின் திரைப்பட ஒளிப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது. 
  முன்னதாக, இந்த சட்டத்திருத்தத்தை கொண்டுவர வேண்டும் என்று திரைத்துறையினர் மத்திய அரசுக்கு நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
  நிதி சேவை மசோதா: நாடெங்கிலும் உள்ள, சர்வதேச நிதி சேவை மையங்களை நிர்வகிக்கும் வகையில் ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்கும் வகையிலான மசோதா, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
  தற்போது வங்கிச்சேவை, காப்பீடு, முதலீடு போன்றவற்றை நிர்வகிப்பதற்காக ஆர்பிஐ, "செபி', ஐ.ஆர்.டி.ஏ. போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. 
  இந்நிலையில், சர்வதேச நிதி சேவைகளை நிர்வகிப்பதற்கான ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும், அதற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai