கரோல் பாக் தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் கைது

தில்லியில், தீ விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த அர்பித் பேலஸ் ஹோட்டலின் உரிமையாளர்

தில்லியில், தீ விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த அர்பித் பேலஸ் ஹோட்டலின் உரிமையாளர் ராகேஷ் கோயலை தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு  போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து தில்லி காவல்துறை உயர் அதிகாரி கூறுகையில்,  "கரோல் பாகில் உள்ள அர்பித் பேலஸ் ஹோட்டலில்  கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில்  17 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, ஹோட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலுக்கு எதிராக வழக்குப்  பதிவு செய்யப்பட்டது. 
அவரை கைது செய்யும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டதுடன், அவர் தேடப்படும் நபராகவும் அறிவிக்கப்பட்டார். 
இந்நிலையில், ராகேஷ் கோயல் கத்தார் நாட்டில் இருந்து விமானத்தில் வருவதாக தில்லி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.   இதுகுறித்து குற்றப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
அதன் பேரில் விமான நிலைய குடியேற்றப் பிரிவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு,  ராகேஷ் கோயலின் கடவுச்சீட்டை முடக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில்,  கத்தார் நாட்டிலிருந்து விமானத்தில் திரும்பிய ராகேஷ் கோயலை தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர். அவர் குற்றப் பிரிவு போலீஸாரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com