மம்தா பிறந்தநாள்: கேஜரிவால் வாழ்த்து

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அந்த மாநில முதல்வராக 2011-ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மிக் கட்சிகள் இணைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் ஊகங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், மம்தா பானர்ஜி தனது 63-ஆ வது பிறந்த தினத்தை சனிக்கிழமை கொண்டாடினார். அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து கேஜரிவால் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், அக்கா மம்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களைப் போன்ற அச்சமற்ற, நேர்மையான தலைவர்கள் இந்தியாவுக்குத் தேவை. நீங்கள் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் இருக்க பிரார்த்தனை செய்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com