சுடச்சுட

  


  தில்லியில் உள்ள கோசாலைகளைப் பராமரிக்க வேண்டியது தில்லி அரசின் கடமை; மாநகராட்சிகளின் கடமை அல்ல' என்று பாஜகவின் மூத்த தலைவரும் தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா தெரிவித்துள்ளார். 
  தில்லி பவனாவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கோசாலை'யை தில்லி முதல்வர் அரவிந்த கேஜரிவால் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார். அப்போது, அவர் அளித்த பேட்டியில், தில்லி அரசு இந்தக் கோசாலைக்கான தனது பங்கு நிதியை ஒதுக்கியுள்ளது. ஆனால், தனது பங்கு நிதியை கடந்த 2 ஆண்டுகளாக வடக்கு தில்லி மாநகராட்சி ஒதுக்கவில்லை. நான் பசுவின் பெயரால் வாக்குக் கேட்பதில்லை. இனியும் கேட்கமாட்டேன். ஆனால், பசுவின் பெயரால் வாக்குக் கேட்பவர்கள் பசுக்களுக்கான தீவனத்தையும் வழங்க வேண்டும். பசுவின் பெயரால் அரசியல் செய்யக் கூடாது' என்று தெரிவித்திருந்தார்.
  இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் விஜேந்தர் குப்தா சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 
  தில்லியில் உள்ள கோசாலைகளைப் பராமரிக்க வேண்டியது தில்லி அரசின் கடமையாகும். இந்நிலையில், மாநகராட்சிகளுக்கும் பங்குள்ளதாக தவறான தகவலை கேஜரிவால் பரப்பி வருகிறார். கோசாலைகளை முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டால் மட்டும் பிரச்னைகள் தீராது. மாறாக, கோசாலைகளுக்கு தேவையான நிதியையும் தில்லி அரசு தவறாமல் ஒதுக்க வேண்டும். மேலும், தில்லியின் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகள் தொடர்பாக தில்லி அரசு கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பாக தில்லி சட்டப்பேரவையில் பேசவுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai