சுடச்சுட

  

  கோடையில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க தில்லி அரசு நடவடிக்கை

  By DIN  |   Published on : 12th January 2019 11:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  வரும் கோடைகாலத்தில் தில்லியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் தில்லி ஜல் போர்டு (டிஜேபி) மேற்கொண்டு வரும் திட்டங்களை விரைந்து முடிக்க முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.
  இது தொடர்பாக தில்லி ஜல் போர்டு உயரதிகாரி கூறியது: 
  தில்லியில் ஜல் போர்டு மேற்கொண்டு வரும் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதல்வர் கேஜரிவால் தலைமையில் நடைபெற்றது. தில்லி மக்களுக்கு கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத வகையில் அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். 
  மேலும், தில்லி ஜல் போர்டு மேற்கொண்டு வரும் திட்டங்கள் தொடர்பான நடவடிக்கை அறிக்கையை அதிகாரிகள் கேஜரிவாலிடம் அளித்தனர். இத்திட்டங்களை வரும் மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்கு முன்பாக முடிக்குவேண்டும் என்றும்ஜல் போர்டு சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு அந்தந்தப் பகுதிக்கு பொறுப்பான முதன்மைப் பொறியாளர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார் என்றார் அந்த அதிகாரி.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai