சுடச்சுட

  


  தில்லி பிரகதி விஹாரில் உள்ள சிஜிஓ காம்ப்ளக்ஸில் சனிக்கிழமை காலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில், உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தார்.
  இது குறிந்து அந்த அதிகாரி கூறியதாவது:பிரகதி விஹாரில் உள்ள சிஜிஓ காம்ப்ளக்ஸில் தீ விபத்து ஏற்பட்டதாக சனிக்கிழமை காலை 9 மணியளவில் தகவல் கிடைத்தது. 
  இதையடுத்து, சம்பவ இடத்துக்கு 23 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். அந்த காம்ப்ளக்கில் முதல் தளத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில் முதலில் தீ பற்றியுள்ளது. இது பரவத் தொடங்கியது. பின்னர், தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு காலை 10.20 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது என்றார் அந்த அதிகாரி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai