சுடச்சுட

  


  வடகிழக்கு தில்லி, வெல்கம் பகுதியில் தனது மகளின் கல்லறைக்கு சென்றவர், மூன்று பேர் கொண்ட கும்பலால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
  வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடந்த இச்சம்பவம் குறித்து வடகிழக்கு தில்லி காவல் துணை ஆணையர் அதுல் தாக்குர் கூறியதாவது: 
  தில்லியில் வசித்து வந்தவர் மெஹ்ஃபியூஸ் (38). மனை வணிகம் செய்து வந்த அவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. ஏற்கெனவே இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்த அவர், ஜாமீனில் வெளியே வந்தார்.
  அவரது மகளின் கல்லறை வடகிழக்கு தில்லி வெல்கம் பகுதியில் உள்ளது. இந்நிலையில், மெஹ்ஃபியூஸ் தனது மகளின் கல்லறைக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத மூவர் அங்கு வந்துள்ளனர். 
  அந்தச் சமயத்தில், ஏதோ ஒரு விஷயத்தில் அவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை துப்பாக்கியால் சுட்டது.
  இது குறித்து அருகே இருந்தவர்கள் போலீஸýக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பலத்த காயமடைந்திருந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
  அவரை சுட்டவர்களை அடையாளம் காணும் வகையில், சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டுள்ளன. முன்விரோதத்தில் அவர் கொல்லப்பட்டாரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai