24 மணி நேரமும் இயங்கும் கால்நடை மருத்துவமனை தில்லியில் தொடக்கம்

தில்லியில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க 24 நேரமும் செயல்படும் மருத்துவமனையை தில்லி தீஸ் ஹசாரி கால்நடை மருத்துவமனையில் தொடகப்பட்டுள்ளது.

தில்லியில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க 24 நேரமும் செயல்படும் மருத்துவமனையை தில்லி தீஸ் ஹசாரி கால்நடை மருத்துவமனையில் தொடகப்பட்டுள்ளது.
இந்த புதிய சேவையை தில்லி மேம்பாட்டுத் துறை அமைச்சர் கோபால் ராய் தில்லியில் புதன்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
தீஸ் ஹசாரி கால்நடை மருத்துவமனை பகலில் மட்டும் செயல்பட்டு வந்தது. இது தற்போது காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரையிலும், பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரையிலும்  மூன்று நேர பகுதி வேலைநேரமாக செயல்படும். இதுபோன்ற 24 மணி நேரம் செயல்படும் மருத்துவமனைகளை தில்லி முழுவதும் 11 மாவட்டங்களில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு ஏதுவாக பட்ஜெட்டில் கூடுதல் தொகை ஒதுக்கப்படும். தேவையான கால்நடை மருத்துவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
தில்லி அரசு அண்மையில் அறிவித்த கால்நடை மருத்துவ, நலத் துறை திட்டம் 2018-இன் படி இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. குரங்குகளின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது, தெரு நாய்களின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது, வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள், கால்நடைகள் ஆகியவற்றின் உரிமையாளர்களைக் கண்டுபிடிக்க சிப் பொருத்துவது ஆகியவை அதில் அடங்கும் என்றார்.
தில்லியில் உள்ள 727 முனிசிபல் வார்டுகளிலும் கால்நடை மருத்துவச் சேவை அளிக்கும் சிறிய மையம் விரைவில் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com