திகார் சிறைத் துணைக் கண்காணிப்பாளர் நீக்கம்

தில்லியில் உள்ள திகார் மத்திய சிறைச்சாலையின் துணைக் கண்காணிப்பாளர் ஜகதீஷ் சிங், அந்தப் பதவியிலிருந்து

தில்லியில் உள்ள திகார் மத்திய சிறைச்சாலையின் துணைக் கண்காணிப்பாளர் ஜகதீஷ் சிங், அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலை விதிகளை மீறியதான குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல் துறை தரப்பில் கூறப்படுவதாவது: தில்லி திகார் சிறைச்சாலையில் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தவர் ஜகதீஷ் சிங். அவர் சிறைச்சாலை விதிமீறல்களில் ஈடுபட்டதாக புகார் இருந்து வந்தது. 
மேலும், நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் சிறைக் கைதி ஒருவரை விடுவித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுதவிர கைதி ஒருவருடன் வெளி ஆள் ஒருவரை சட்டவிரோதமாக சந்திக்க உதவிய சம்பவத்தில் ஜகதீஷ் சிங் குற்றவாளி என கண்டறியப்பட்டார். இந்தப் புகார்கள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் அவர் விதிமீறல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், தில்லி அரசின் தலைமைச் செயலாளர் ஒப்புதலின் பேரில், ஜகதீஷ் சிங் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதாவது அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுவிட்டது.
கடந்த சில நாள்களுக்கு முன் தில்லி சுகாதாரத் துறையின் கீழ் இயங்கி வரும் மருத்துவமனைக்கு நுகர்பொருள்கள் வாங்கியதில் ரூ.46.64 லட்சம் அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக அதன் கிட்டங்கி மேற்பார்வையாளர் ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தில்லி அரசின் தலைமைச் செயலாளராக கடந்த ஆண்டு நவம்பரில் நியமிக்கப்பட்ட விஜய்குமார் தேவ் கூறுகையில், "ஊழல், விதிமீறல்களை எந்த வகையிலும் சகித்துக் கொள்ள முடியாது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com