தலைநகர் தில்லியில் மீண்டும் மிகவும் மோசமான பிரிவில் காற்று மாசு!
By DIN | Published On : 24th January 2019 11:51 PM | Last Updated : 24th January 2019 11:51 PM | அ+அ அ- |

ஓரிரு தினங்களாக "மோசம்' பிரிவில் காற்று மாசு இருந்த நிலையில், வியாழக்கிழமை "மிகவும் மோசம்' பிரிவில் காணப்பட்டதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர் தெரிவித்தனர்.
விரும்பத்தகாத வானிலை சூழல்கள் காற்றில் மாசுபடுத்திகள் பரவல் செயல்பாட்டை குறைத்துவிட்டன. இதன் காரணமாக, காற்றில் மாசு அளவு மிகவும் மோசம் நிலைக்குச் சென்றது என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட தகவலில், வியாழக்கிழமை ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு 328 ஆக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் 27 இடங்களில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவிலும், ஏழு இடங்களில் மோசம் பிரிவிலும் காணப்பட்டது. தேசியத் தலைநகர் வலயத்தில் நொய்டா, ஃபரீதாபாத், கிரேட்டர் நொய்டா, குருகிராம் உள்ளிட்ட இடங்களில் காற்றின் தரம் மோசம் பிரிவில் நீடித்தது. தில்லியில் பி.எம். 2.5 நுண்துகள் மாசு அளவு 167 ஆகவும், பி.எம். 10 நுண்துகள் மாசு அளவு 280 ஆகவும் பதிவாகியிருந்தது.
வெப்பநிலை: தில்லியில் வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 9.7 டிகிரி செல்சியஸôகவும், அதிகபட்ச வெப்பநிலை 22.2 டிகிரி செல்சியஸôகவும் பதிவானது. காலை 8.30 மணியளவில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 100 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 89 சதவீதûமாகவும் பதிவாகியிருந்தது.
முன்னறிவிப்பு:வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸôகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸôகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.