குடிபோதையில் மாடியில் இருந்து விழுந்தவர் பலி
By DIN | Published On : 01st July 2019 01:41 AM | Last Updated : 01st July 2019 01:41 AM | அ+அ அ- |

தில்லி புறநகர்ப் பகுதியில் குடிபோதையில் மொட்டை மாடியில் இருந்து குதித்த இளைஞர் உயிரிழந்தார்.
இதுகுறித்து புறநகர் தில்லி காவல் துணை ஆணையர் கௌரவ் சர்மா ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
பிகார் மாநிலம், ஒளரங்காபாத் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (40). இவர் புறநகர் தில்லியில் உள்ள தனது மைத்துனர் லால் மோகன் யாதவ் வீட்டுக்கு சனிக்கிழமை சென்றார்.
கட்டுமானத்தில் அந்த வீட்டின் மொட்டை மாடியில் அவர்கள் மது அருந்தினர். பின்னர், தனது உறவினர் லால் மோகன் யாதவுடன் அதே மாடியில் மனோஜ் தூங்கினார். இந்நிலையில், அவர் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அவர் போதையில் கீழே விழுந்து இறந்ததும், இச்சம்பவத்தில் சதி ஏதும் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக மனோஜின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.