சாகிப் சிங் வர்மாவுக்கு அமித் ஷா புகழாரம்
By DIN | Published On : 01st July 2019 01:43 AM | Last Updated : 01st July 2019 01:43 AM | அ+அ அ- |

தில்லியின் மேம்பாட்டுக்கு சாகிப் சிங் வர்மா மிகச் சிறந்த பங்காற்றினார் என்று மத்திய உள்துறை அமைச்ர் அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.
தில்லியின் முன்னாள் முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் 12-வது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. கக்ரோலாவில் அமைந்துள்ள சாகிப் சிங் வர்மா பூங்காவிலுள்ள அவரது சிலைக்கு அமித் ஷா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி, வடமேற்கு தில்லி பாஜக உறுப்பினர் ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ், முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் அமித் ஷா பேசுகையில், "தில்லியின் மேம்பாட்டுக்கு சாகிப் சிங் வர்மா அளப்பரிய பங்காற்றினார். அவர் உயிருடன் இருந்திருந்தால், இன்றைய தில்லியின் தோற்றமே முழுமையாக மாறியிருக்கும். தில்லி மக்களின் மனதுக்குப் பிடித்த மிகச் சிறந்த தலைவராக அவர் இருந்தார். அவருக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்' என்றார்.