ஆவடி-கூடுவாஞ்சேரி ரயில் பாதைக்கான சாத்தியக்கூறு ஆராயப்படும்

சென்னை ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி இடையே ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள்

சென்னை ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி இடையே ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும் என்று மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மக்களவையில் திமுக குழுத் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி உறுப்பினருமான டி.ஆர். பாலு கேள்வி எழுப்பினார். அதில், சிறிய ரயில் வழித்தடமான ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி இடையே ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டால், சென்னையில் இருந்து வரும் பயணிகளுக்கு போக்குவரத்து நெரிசல் இருக்காது என்றார். 
அதற்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்துப் பேசுகையில், "நாடு முழுவதும் பல ரிமோட் பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதிகளுக்கு ரயில் தொடர்புவசதி ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது. உறுப்பினர் (டி.ஆர். பாலு) எழுப்பிய கோரிக்கை குறித்து ஆராயப்படும். சாத்திக்கூறுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டால் இத்திட்டம் செயல்படுத்தப்படும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com