சுதந்திர தினத்தன்று நொய்டாவில் 1.87 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு

தேசியத் தலைநகர் வலயம், நொய்டாவில் சுதந்திர தினத்தன்று மொத்தம் 1.87 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு நகர நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

தேசியத் தலைநகர் வலயம், நொய்டாவில் சுதந்திர தினத்தன்று மொத்தம் 1.87 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு நகர நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது: நொய்டா நகரில் இந்த ஆண்டு (2019-20) மொத்தம் 5,04,953 மரக்கன்றுகள் நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சுதந்திர தின நாளான ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று 1,87,808 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. இத்திட்டத்தை சமுதாய மக்களின் பங்கேற்புடன் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம். கடந்த 2018-19-ஆம் ஆண்டில் நொய்டாவில் 4,64,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. இது அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் 1,49,504 மரக்கன்றுகள் கூடுதலாகும். 
இதேபோல உத்தரப் பிரதேச மாநிலம், கெளதம் புத் நகர் நிர்வாகமும் இந்த நிதியாண்டில் மாவட்டத்தில் மொத்தம் 7,49,000 மரக்கன்றுகள் நடுவதற்குத் திட்டமிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து நொய்டா நகர நிர்வாகப் பொதுமேலாளர் ராஜீவ் தியாகி கூறியதாவது: இந்த முறை பல அடுக்கு பார்க்கிங் பகுதிகளிலும் மரக் கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் நொய்டாவில் மரக்கன்றுகள் நடுவதற்கென 17 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி, ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று 1,87,800 மரக்கன்றுகள் நடப்படும். இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-இல் நடப்பட்டதை விட 1,04,918 மரக்கன்றுகள் அதிகமாகும். இதில் நொய்டா செக்டார்-91-இல் உள்ள பல்லுயிர் பூங்காவில் 90,500 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. செக்டார் 43-இல் 12,000, செக்டார் 3-இல் பார்க்கிங் பகுதிகளில் 10,309, டிஎஸ்சி சாலையில் 10,300 மரக்கன்றுகள் நடப்படும். மேலும், நொய்டா செக்டார் 5, 16 17, 18, 23, 34, 52, 72, 150, 155 ஆகிய பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.
இந்த ஆண்டு நடைபெறும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எதிர்பார்க்கிறார். மாநிலத்தில் இந்த ஆண்டில் மொத்தம் 22.55 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் இந்த ஆண்டு சுதந்திர தின நாளான ஆகஸ்ட் 15-இல் மட்டும் மாநிலம் முழுவதும் 11.27 கோடி மரக்கன்றுகள் நடப்படவுள்ளன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com