சுடச்சுட

  

  குடியிருப்பு சொசைட்டிகளைக் கட்டமைக்க உத்தரவிட வேண்டும்: பாஜக கோரிக்கை

  By DIN  |   Published on : 13th July 2019 08:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தில்லியில் குடியிருப்பு சொசைட்டிகளை நவீன வசதிகளுடன் கட்டமைப்பதற்கான உத்தரவை உடனே பிறப்பிக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலை நேரில் சந்தித்து பாஜக எம்.பி.க்கள் விஜய் கோயல், ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், பர்வேஷ் வர்மா, எம்எல்ஏ ஓபி சர்மா ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
  இது தொடர்பாக விஜய் கோயல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
  தில்லியில் உள்ள குடியிருப்பு சொசைட்டிகளை அதி நவீன வசதிகளுடன் கட்டமைக்கவுள்ளதாக தில்லி வளர்ச்சி ஆணையம் (டிடிஏ) தெரிவித்துள்ளது. இதன்படி, 1,200 சொசைட்டிகளில் வாழும் சுமார் 10 லட்சம் மக்கள் பயனடைவர். டிடிஏயின் இந்த அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்நிலையில், குடியிருப்பு சொசைட்டிகளை கட்டமைப்பதற்கான உத்தரவை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலை நேரில் சந்தித்துக் கேட்டுக் கொண்டோம்.
   மேலும், தில்லி மாநகராட்சிகள் இந்த சொசைட்டி மக்களுக்கான சேவைகளை முறையாகச் செய்யாததால் அந்த மாநகராட்சிகள் சொசைட்டி மக்களிடம் வரி வசூலிப்பதைச் தடை செய்ய வேண்டும் என துணைநிலை ஆளுநரிடம் கேட்டுக் கொண்டோம். மேலும், தில்லி ஜல் போர்டும் முறையாக குடிநீர் இணைப்புகளை வழங்காததால் அவர்களும் வரி வசூலிப்பதைத் தடை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டோம். மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை தில்லியில் உள்ள சொசைட்டிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கும் மிகப் பெரிய கூட்டம் தால்கோத்ரா அரங்கில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை விருந்தினராகவும், மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர தோமர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai