சுடச்சுட

  

  கேட்பாரற்று கிடந்த பார்சலில் 1 கிலோ தங்கம்: தில்லி விமான நிலையத்தில் பரபரப்பு

  By DIN  |   Published on : 14th July 2019 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பார்சலால் சனிக்கிழமை வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. சோதனைக்கு பின்னர், அந்த பார்சலில் 1 கிலோ எடையுள்ள தங்க கட்டி இருந்தது கண்டறியப்பட்டது.
  இதுதொடர்பாக மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஎஸ்ஐஎஃப்) அதிகாரி ஒருவர் கூறியதாவது:
  தில்லி விமான நிலையத்தின் 3-ஆவது முனையப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஒரு பார்சல் கேட்பாரற்று கிடந்ததை சிலர் பார்த்துள்ளனர். இதுகுறித்து, சிஐஎஸ்எஃப் படையினரிடம் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அந்த பார்சலில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், பார்சலை திறந்து பார்த்தபோது, 1 கிலோ எடையுள்ள தங்க கட்டி இருந்தது. சுமார் ரூ.35 லட்சம் மதிப்புள்ள அந்த தங்க கட்டி, சுங்கத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தங்க கட்டியை கடத்துவதற்கு, யாரோ ஒரு பயணி முயற்சி செய்திருக்கலாம்; ஆனால், சோதனைக்கு பயந்து அங்கேயே விட்டுச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக சுங்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்றார் அந்த அதிகாரி.
  போதைப் பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது: தில்லி விமான நிலையத்தில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருளுடன் ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த பெண் பயணி கைது செய்யப்பட்டார்.
  இதுதொடர்பாக சிஎஸ்ஐஎஃப் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
  ஜிம்பாப்வேயைச் சேர்ந்தவரான நஸ்டார் ஃபரிராய் ஜிúஸா (34), தில்லியிலிருந்து எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா வழியாக ஜாம்பியாவின் நடோலாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக, தில்லி விமான நிலையத்துக்கு அவர் வெள்ளிக்கிழமை இரவு வந்திருந்தார். அவரது உடைமைகளை சோதனையிட்டபோது, சுமார் 20 கிலோ எடையுள்ள போதைப்பொருள்கள் அடங்கிய பொட்டலங்கள் இருந்தன. 
  இதையடுத்து, அந்த பெண் கைது செய்யப்பட்டு, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடமிருந்து ரூ.21 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்றார் அந்த அதிகாரி.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai