சுடச்சுட

  


  கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக இருவரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.2.4 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
  இது குறித்து போலீஸார் சனிக்கிழமை கூறியதாவது: கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், போலீஸார் பவானா தொழிற்பேட்டை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
  கடந்த வியாழக்கிழமை அந்த வழியாக சந்கேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒரு டிரக்கை வழிமறித்து போலீஸார் சோதனை நடத்தினர். அதில் வந்த இருவரிடம் சுமார் 800 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் நாங்க்லாயை சேர்ந்த முகம்மது காஜிம் (26), உத்தரப்பிரதேச மாநிலம், மிர்ஸாபூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் (34) என விசாரணையில் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு ரூ.2.4 கோடியாகும்.
  காஜிமிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கடந்த 2012-இல் தில்லிக்கு வந்ததும், அப்போது ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்ததும் தெரிய வந்தது. அதன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து போதைப்பொருள் கடத்தும் தொழிலில் ஈடுபட்டு வந்த சலாம் என்பவருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. சலாம், ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வரவழைத்து, அவற்றை தில்லி, தேசியத் தலைநகர் வலய (என்சிஆர்) பகுதியில் கஞ்சா கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், இதில் தொடர்புடைய அவர்களது மற்ற கூட்டாளிகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai