கர்தார்பூர் வழித்தடம்: இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை

கர்தார்பூர் வழித்தட  திட்டம் தொடர்பான நடைமுறைகள் குறித்து இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.


கர்தார்பூர் வழித்தட  திட்டம் தொடர்பான நடைமுறைகள் குறித்து இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இதுகுறித்து தில்லியில் மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:
அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து கர்தார்பூர் வழித்தடம் திட்டம் தொடர்பான நடைமுறைகள் குறித்து பேசவுள்ளனர். இதில் யாத்ரீகர்களின் பயணம், யாத்திரை செல்லும் நபர்களின் எண்ணிக்கை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. கர்தார்பூர் வழித்தடத் திட்டத்தில் பாதுகாப்புத் தொடர்பான விவகாரத்தில் இந்தியாவுக்கு சில சந்தேகங்கள் உள்ளன. அதுகுறித்து இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா எழுப்பலாம் எனத் தெரிகிறது என்று மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.
சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக், பாகிஸ்தானின் கர்தார்பூரில் தனது கடைசி காலத்தில் வாழ்ந்தார். அங்கு அவரது நினைவாக குருத்வாரா தர்பார் சாஹிப் கட்டப்பட்டுள்ளது. இந்த குருத்வாராவுக்கு செல்வதை சீக்கிய மதத்தினர் அனைவரும் தங்களது புனித கடமையாக கருதுகின்றனர். அந்த குருத்வாராவுக்கு இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்கள் விசா உள்ளிட்ட எந்த நடைமுறையும் இல்லாமல் சென்று வருவதற்கு வழிவகை செய்து தரும் வகையில், கர்தார்பூர் வழித்தடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பகுதியில், பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூரில் இந்தத் திட்டத்துக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகியோர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி அடிக்கல் நாட்டினர். இருநாள்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் தரப்பில் நரோவால் பகுதியில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அடிக்கல் நாட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com