1,000 மொஹல்லா கிளினிக் வாக்குறுதியை தில்லி அரசு நிறைவேற்றவில்லை: மனோஜ் திவாரி புகார்

தில்லியில் 1,000 மொஹல்லா கிளினிக்குகள் அமைக்கப்படும் என்று மக்களுக்கு அளித்த வாக்குறுதியை

தில்லியில் 1,000 மொஹல்லா கிளினிக்குகள் அமைக்கப்படும் என்று மக்களுக்கு அளித்த வாக்குறுதியை தில்லி அரசு நிறைவேற்றவில்லை என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. 
இது தொடர்பாக பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி கூறியதாவது: தில்லியில் 1,000 மொஹல்லா கிளினிக்குகள் அமைக்கப்படும் என்று கடந்த 2016, ஜூனில் தில்லி மக்களுக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வாக்குறுதியளித்திருந்தார். ஆனால், தில்லியில் இதுவரை 191 மொஹல்லா கிளினிக்குகளே அமைக்கப்பட்டுள்ளதாக செய்திச் சேவை நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
2015 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் தில்லியில் 900 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என்று கேஜரிவால் வாக்குறுதியளித்திருந்தார். பின்னர் 2016, டிசம்பருக்குள் 1,000 மொஹல்லா கிளினிக்குகள் அமைக்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்திருந்தார். இதில் ஒவ்வொரு 5 கிலோ மீட்டர் தூரத்துக்கும் ஒரு மொஹல்லா கிளினிக் அமைக்கப்படும் என்றும், 10,000 மக்கள்தொகை உள்ள ஒவ்வொரு இடத்திலும் ஒரு மொஹல்லா கிளினிக் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால், தனது வாக்குறுதியை அவர் காப்பாற்றவில்லை.
இந்நிலையில், புதிதாத 721 மொஹல்லா கிளினிக்குகள் அமைக்கப்பதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஆனால், இந்த இடங்கள் எங்கெங்கேயுள்ளன என்பதில் குழப்ப நிலை நீடிக்கிறது. மொஹல்லா கிளினிக்குகளுக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாகவும் குழப்ப நிலை நீடிக்கிறது. தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைகள் தரம் குறைந்து காணப்படுகின்றன. அங்கு படுக்கை வசதிகள் அமைக்கப்படவில்லை. சுகாதார விஷயத்தில் தில்லி மக்களை கேஜரிவால் ஏமாற்றிவிட்டார் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com