புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரிக்கை நிராகரிப்பு: மக்களவையில் தகவல்
By DIN | Published On : 24th July 2019 06:27 AM | Last Updated : 24th July 2019 06:27 AM | அ+அ அ- |

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் எனக் கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் அமைச்சர் ஜி. கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலை 17ஆம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை பரிசீலித்த மத்திய உள்துறை அமைச்சகம், தற்போதைய நடைமுறையே தொடர வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. ஆகையால், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் எந்தவித கோரிக்கையும் நிலுவையில் இல்லை' ன்று தெரிவித்துள்ளார்.