Enable Javscript for better performance
அங்கீகாரமற்ற காலனிகள்: மத்திய அரசுக்கு 12 பரிந்துரைகளைஅனுப்பியது தில்லி அரசு- Dinamani

சுடச்சுட

    

    அங்கீகாரமற்ற காலனிகள்: மத்திய அரசுக்கு 12 பரிந்துரைகளைஅனுப்பியது தில்லி அரசு

    By DIN  |   Published on : 25th July 2019 07:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தலைநகரில் உள்ள அங்கீகாரமற்ற காலனிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக, தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு, மத்திய அரசுக்கு 12 பரிந்துரைகளை அனுப்பியுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
    தில்லியில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து, தில்லி அரசு மக்கள் நலப் பணிகளை விரைவுபடுத்தி வருகிறது. 
    அந்த வகையில், தில்லியில் உள்ள ஏராளமான அங்கீகாரமற்ற காலனிகளுக்கு அங்கீகாரம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கூறி வருகிறது. 
    இந்நிலையில், தற்போது இதற்கான நடவடிக்கைகளை தில்லி அரசு தொடங்கியுள்ளது. 
    இது தொடர்பாக தில்லியில் முதல்வர் கேஜரிவால் செய்தியாளர்களிடம்  புதன்கிழமை கூறியதாவது:
    தில்லியில் உள்ள அங்கீகாரமற்ற காலனிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தில்லி அரசு துரிதப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு 12 பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன. 
    இதன்படி, இந்தக் காலனிகளில் வசிப்போருக்கு சொத்துரிமை அளிப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு விரைவில் எடுக்க வேண்டும். முதல் கட்டமாக 1,797 காலனிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும். 
    எஞ்சியுள்ள காலனிகளுக்கு இரண்டாவது கட்டமாக அங்கீகாரம் வழங்கப்படும். இந்தக் காலனிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிபந்தனைகள் அனைத்தையும் நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். இதன்படி 12 பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அளித்துள்ளோம் என்றார் கேஜரிவால்.
    தில்லியில் அங்கீகாரமற்ற காலனிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக ஒரு மாதத்திற்குள் அரசாணை வழங்கப்படும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி செவ்வாய்க்கிழமை தெவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai