Enable Javscript for better performance
இளைஞர் சுட்டுக் கொலை- Dinamani

சுடச்சுட

    

    வடகிழக்கு தில்லியில் இளைஞர் ஒருவரை மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
    இது குறித்து காவல் துறை உயரதிகாரி புதன்கிழமை கூறியதாவது: வடக்கு தில்லி, துர்காபுரி செளக்கில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
    கொல்லப்பட்ட இம்ரான் (36), தில்லி ஷாதரா பகுதியைச் சேர்ந்தவர். இரும்புக் கடை ஒன்றில் வேலைபார்த்து வந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
    மேலும், அவரைக் கொன்றவர்களை அடையாளம் காணும் வகையில், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டுள்ளன என்றார் அந்த அதிகாரி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai