Enable Javscript for better performance
தில்லியில் மிகப் பழைமையான 4 மாடிக் கட்டடம் இடிந்தது- Dinamani

சுடச்சுட

    

    மத்திய தில்லி, நபி கரிம் பகுதியில் இருந்த மிகப் பழைமையான நான்கு மாடிக் கட்டடம் புதன்கிழமை காலையில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனத் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
    இது குறித்து தீயணைப்புத் துறை உயரதிகாரி கூறியதாவது: இந்தக் கட்டடம் இடிந்து விழுந்தது குறித்து தீயணைப்புத் துறைக்கு புதன்கிழமை காலை 10.57 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இந்தப் பழைமையான கட்டடத்தில் யாரும் குடியிருக்கவில்லை. இந்தக் கட்டடம் மிகவும் பழைமையானது. பழைய வடிவமைப்பைக் கொண்டதாகும். தீயணைப்புப் படையினர் துரிதமாக செயல்பட்டு இரண்டு மணி நேரத்தில் இடிபாடுகளை அகற்றினர் என்றார் அந்த அதிகாரி.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai