Enable Javscript for better performance
விமான நிலையங்கள் தனியார்மயம் ஏன்? மக்களவையில் காங்கிரஸ் கேள்வி- Dinamani

சுடச்சுட

    

    விமான நிலையங்கள் தனியார்மயம் ஏன்? மக்களவையில் காங்கிரஸ் கேள்வி

    By DIN  |   Published on : 25th July 2019 07:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாட்டில் உள்ள விமான நிலையங்களைத் தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு எடுத்தது ஏன் என்று மக்களவையில் காங்கிரஸ் புதன்கிழமை கேள்வி எழுப்பியது.
    இது தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை விதி எண் 377-இன் கீழ் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் பி.மாணிக்கம் தாகூர் முன்வைத்த கோரிக்கை:
    மத்திய அரசு நாட்டில் உள்ள லக்னௌ, ஆமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், குவாஹத்தி ஆகிய ஆறு விமான நிலையங்களை அரசு - தனியார் பங்களிப்பு (பிபிபி) திட்டத்தின் மூலம் தனியார்மயமாக்கும் முடிவை எடுத்துள்ளது. விமான நிலையங்களை உருவாக்குவதுஅவ்வளவு எளிதல்ல. கடினமான பணிகளை உள்ளடக்கியதாகும். இதில் அதிக முதலீடுகளும், செலவினமும் அடங்கியிருக்கிறது. ஆனால், இத்தகைய சூழலில் விமான நிலையங்களை கையாள தனியார் நிறுவனங்களிடம் அரசு ஒப்படைப்பதில் என்ன காரணம்? லாபம் ஈட்டி வரும் இந்த விமான நிலையங்களைப் பாரமரிப்பதில் இந்திய விமானங்கள் ஆணையகத்திற்கு என்ன கஷ்டம் இருக்கிறது? இந்த விஷயத்தில் விமான நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எதிர்காலத்தை அரசு சிந்தித்திருக்கிறதா? ஆகவே, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தனியார்மயத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்த விவரங்களை மத்திய சிவில் விமானத் துறை அளிக்க வேண்டும் என்றார். 
    பள்ளிகரணை சதுப்பு நிலம் பாதுகாக்கப்படுமா: மக்களவையில் விதி எண் 377-இன் கீழ் தென் சென்னை தொகுதி திமுக உறுப்பினர் சுமதி தமிழச்சி தங்கப்பாண்டியன் புதன்கிழமை முன்வைத்த கோரிக்கையில், "சென்னையில் அமைந்துள்ள 80 ச.கி.மீ. பரப்பளவுள்ள பள்ளிகரணை சதுப்புநிலம் தென் இந்தியாவில் உள்ள இயற்கை வடிகால் அமைப்புகளில் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது.ஆனால், இந்தச் சதுப்பு நிலம் ஆக்கிரமிப்பு மற்றும் தரம் இழப்பில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்குகள் மூடப்பட்டு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இடமாற்றம் செய்யப்பட்டால், சதுப்பு நிலம் பாதிக்கப்படுவது குறையும். சென்னை உயர்நீதிமன்றம் கூட இந்தச் சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க உத்தரவிட்டுள்ளது. எனவே, பள்ளிகரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாக்கும் வகையில், தேசிய ஈரநிலம் பாதுகாப்பு மேலாண்மை திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒரு விரிவான பல்லுயிர் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்க வேண்டும்' என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai