Enable Javscript for better performance
வெளிநாடுவாழ் இந்தியர்களின் பிரச்னைகளை தீர்க்க அதிக முன்னுரிமை- Dinamani

சுடச்சுட

    

    வெளிநாடுவாழ் இந்தியர்களின் பிரச்னைகளை தீர்க்க அதிக முன்னுரிமை

    By DIN  |   Published on : 25th July 2019 07:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெளிநாடுவாழ் இந்தியர்களின் பிரச்னைகளைத் தீர்க்க அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
    இதுதொடர்பாக மக்களவையில் அவர் புதன்கிழமை கூறியதாவது:
    வெளிநாடுவாழ் இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை புகாராகப் பதிவு செய்வதற்கென பிரத்யேகமாக உள்ள இணையதளம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 
    பதிவு செய்யப்படும் புகார்கள் குறிப்பிட்ட காலகெடுவுக்குள் தீர்த்து வைக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் வசித்து வரும் இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதற்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களிலும் புகார் அளிக்கலாம்.
    கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கடந்த 18ஆம் தேதி வரை மொத்தம் 50,605 புகார்கள் இணையதளம் மூலம் கிடைக்கப் பெற்றன. அவற்றில், 44,360 புகார்கள் தீர்த்து வைக்கப்பட்டு விட்டன என்றார் ஜெய்சங்கர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai