Enable Javscript for better performance
"அதிமுக கூட்டணி தோல்விக்கு  மோடி எதிர்ப்பு அலை காரணமல்ல'- Dinamani

சுடச்சுட

    

    "அதிமுக கூட்டணி தோல்விக்கு  மோடி எதிர்ப்பு அலை காரணமல்ல'

    By DIN  |   Published on : 01st June 2019 06:40 AM  |   அ+அ அ-   |    |  

    தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் தோல்விக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான அலை என்பது தவறாகும் என்று தேமுதிக துணைப் பொதுச் செயலர் எல்.கே. சுதீஷ் கூறினார். 
    தில்லியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக துணை பொதுச் செயலர் எல்.கே. சுதீஷ் பங்கேற்றார். அவர் வெள்ளிக்கிழமை "தினமணி'க்கு அளித்த பேட்டி: 
    தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம். கடந்த மக்களவைத் தேர்தலின் போது அதிமுகவுக்கு 37 தொகுதிகள் கிடைத்தன. கன்னியாகுமரி, தருமபுரியில் எங்கள் கூட்டணியில் இருவர் வெற்றி பெற்றனர். 
    கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் அமைச்சராகப் பதவியேற்று அத்தொகுதி மக்களுக்கு பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தார். அப்போது, அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் 37 பேர் இருந்தும் எதுவும் செய்ய முடியாத நிலைமைதான் இருந்தது.
     அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் நல்லது நடக்க வேண்டும் என்ற நோக்கில்  பாஜகவுடன் கூட்டணியில் அதிமுக, பாமக சேர்ந்தன. 
    கடந்த முறை தேர்தலில் நடைபெற்ற அதே தப்புதான் தற்போதைய தேர்தலிலும் தமிழகத்தில் நடைபெற்துள்ளது. அதாவது, திமுக கூட்டணியைச் சேர்ந்த 37 எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 
    நிச்சயமாக அவர்கள் தமிழகத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது. திமுக கூட்டணி எம்பிக்களால் தொகுதிகளுக்கான திட்டங்களைப் பெற்று வர முடியாது. அதேவேளையில், பாஜக அரசு தமிழகத்திற்கான நல்ல விஷயங்களை முன்னெடுத்துச் செல்லும். 
    மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்ற எண்ணத்தில்தான் தமிழக மக்கள் வாக்களித்துள்ளனர். அதுதான் தேர்தலில் திமுக கூட்டணி பெரிய வெற்றி பெறக் காரணம். திமுகவுக்காகவோ, நரேந்திர மோடிக்கு எதிராகவோ மக்கள் வாக்களிக்கவில்லை. ஏனெனில், இந்தியா முழுவதும் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் மட்டும் தோல்வி ஏற்பட்டுள்ளது. 
    மேலும், திமுக கூட்டணித் தலைவர்கள் இரு ஆண்டுகளாக மத்திய ஆட்சி குறித்து தமிழக மக்களிடம் பொய்ப் பிரசாரம் செய்து வந்தனர். மேலும், பொய் வாக்குகுறுதிகளையும் அளித்திருந்தனர். இதுவே அவர்கள் வாக்குகளைப் பெறக் காரணமாக அமைந்திருந்தது.
    தேர்தலில் தேமுதிகவுக்கு வாக்கு சதவீதம் குறைந்துவிட்டதாகக் கூறப்படுவதும் தவறாகும். தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிட்டது வெறும் நான்கு தொகுதிகள் மட்டுமே. எங்கள் கட்சி வாக்கு, மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட எங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு விழுந்துள்ளது. 
    இதனால், நான்கு தொகுதிகளை வைத்துக் கணக்கீடு செய்வது தவறாகும். கட்சித் தொண்டர்களைப் புத்துயிரூட்டும் வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளார். அடுத்து வரும் தேர்தலில் அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்வார். 
    தேமுதிக பழைய எழுச்சியைப் பெறும். ஒரு தோல்வியை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது. தமிழக அரசியலில் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் மிகப் பெரிய ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்திருக்கின்றன. அதுபோல் தேமுதிகவும் சந்தித்து வருகிறது என்றார் அவர். 
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp